பன்னண்டு மணி....
பன்னண்டு மணி.... செக்யுரிட்டி டான்.. டான்.. ன்னு மணி அடிக்கிறது.. நிசப்தமான இரவில் கணீறேன்று கேட்கின்றது... இன்னமும் தூக்கம் வரமாட்டேங்குது. வயசா மனசா.. ன்னு தெரியல.. கண்டிப்பா வயசாகிறது உண்மைதான். ஆனா ரொம்ப பேர் கிட்ட பேசும்போது எம்மனசுக்கு இன்னும் வயசாகல.. ன்னு தான் பேசிகிட்டு இருக்கேன்.. அது உண்மை தான்னு கூட தோணுது. இன்னமும் வயசு பசங்க கூட தான் வம்பு பேசணும் போல இருக்க. அவங்கள கலாய்க்கிறது.. நக்கலடிக்கிறது.. நோன்டிப்பாக்கறது எல்லாம் ஜாலியாதான் இருக்கு.. எல்லாத்துக்கும் மேல் சின்னக்குழந்தைகலோடே வெளையாடறது இன்னமும் ரொம்ப குளிர்ச்சியா இருக்கு. எவ்வளவு வயசானாலும் சின்ன வயசு நினைவுகள் சில பசுமரத்தாணி போல் (அது என்னாடா பசுமரத்தாணி.. ஒரு தடவயாவது அந்த மாதிரி பசுமரத்துல ஆணி அடிச்சிருக்கியாடா நீ..) இருக்கிறது.. ரொம்ப ரொம்ப சின்ன வயசுல.. என்ன 2 அல்லது ரென்டரை வயசுல சாந்தாக்கா கமலாக்கா (என்றுதான் நினைக்கிறேன்).. அப்பறம் கனகராஜி அண்ணன்.. அவங்களோட போலீஸ் குவார்ட்டர்ஸில் வெளயாண்டது..
அந்த மாமாவை (சாந்தாக்காவோட அப்பா) பார்க்கவே பயமா இருக்கும். (அவர் பேர் ஞாபகம் வர மாட்டேங்குது) அப்ப அவர் ஏட்டய்யாவா இருந்தார்.. கடசி வரைக்கும் ஏட்டய்யாவாத்தான் இருந்தார் என நினைக்கிறென். ஏன் எங்கப்பாகூட போலீஸ் கான்ஸ்டபுலா சேர்ந்து ரிடயர்மென்ட் வரைக்கும் அதே கான்ஸ்டபுலாவே ரிடயர் ஆய்விட்டார். வெள்ளக்காரன் கிட்ட போலிஸ்ல வேல செஞ்சத பத்தி எப்பவாவது அத்தி பூத்தமாதிரி பேசுவார். ஐதராபாத் நிஜாம் அந்த காலத்துல இந்திய ராஜ்ஜியத்துகூட சேர மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சது.. சர்தார் வல்லபாய் படேல் நிஜாமை மிரட்டி பணியவச்சது.. அதுக்காக வேண்டி அப்பா இருந்த பட்டாலியனை ஐதராபாத்துல முகாம் போட்டு டூட்டி பாத்ததெல்லாம் சொல்வாரு. அப்பாவுக்கு வர்ணணை எல்லாம் வராது.. சும்மா ரேடியோவுல செய்தி வாசிக்கற மாதிரி எதையாவது சொல்வாரு.. கதைசொல்றேன் பேர்வழின்னுட்டு.. போச்சுன்னமண்டை வ்ந்தனமண்டை.. ந்னுட்டு என்னத்தையோ சொல்லிகிட்டிருப்பாரு.. போப்பா இந்த கதை நல்லாவே இல்லன்னு கையை ஒதறிகிட்டு வேற திக்குல பாத்துகிட்டு இருப்போம். அம்மா கதையை இது வரைக்கும் யாரும் அடிச்சிகிட்ட மாதிரி தெரியல. பெருவாரியாக சாமி கதைங்க.. புள்ளையார் எப்படி ஒலகத்தை சுத்தாமயே அப்பா அம்மா கிட்ட இருந்து மாம்பழத்தை தட்டினது.. அப்பறம்..அவ்வையாருக்கு முருகன் சுட்ட பழத்தை குடுத்தது.. எல்லாம்.. அப்பப்ப முயல் ஆமை ரேஸ் கதையெல்லம் கூட வரும்.. ஆனா ஆயா (அப்பத்தா) வுக்கு தெரிஞ்ச அந்த ஒரே கதையான குசு உட்ட கதையைக்கேட்டு கேட்டு... அலுத்துப்போச்சு எங்களுக்கு. மிக்கவாறும் ஆயாகிட்ட கதையே கேக்கறதுல்லன்னு ஆய் போச்சு. ஆனா எங்க ஆயா மாதிரி அவங்களுடைய பேரப்புல்லைங்ககிட்ட பாசத்தைக்காட்ட யாராலும் முடியாது.. எல்லா நேரத்திலையும் மடியில எங்களுக்கு என்னமாவது திங்கறதுக்கு கேரண்டியா வச்சிருக்கும். எல்லாத்துக்கும் மேல ஆயாவோட மடியில படுத்துக்குனு அவங்க மடியிலருந்து வரும் வெத்தல போயல வாசம் அப்படியே கிறக்கமா கண்ணு சொருக தூங்கறது.. ஆஹா அது ஒரு அனுபவம்..


2 Comments:
Heading is nice like a horror story.
Content is also very good.
I liked Thatha's Story rather than patti.It seems like u are amma gondu.
ha ha ha............
But u will say only one story every time {Rakshasan story}It will be thrilling every time to hear.
But this story is like ur biography.
Nice appa.
Anu.
8:01 AM
Anukutti.. thank u very much for you first comment.. first of all I am not trying to write any stories..u know... These are the thoughts just coming on and off in my minds which I want to register some where.. or if I have a friend here at Ambaji like sethuraman uncle (Neyveli)I would be talking all these with one like him.. And that Rakshashan story is still attracting children like Valarivan Uncle's daughter, Pasu mamas children... perhaps Sadhana (Revathy's daughter) will now start asking me to tell these stories... I am really enjoying to tell these stories to the children (the more younger the more preferable)to see and listen to their innocent "அப்பறம்.. அப்பலம்.. அய்யய்யோ.. அப்பறம்.." போன்ற அவர்களது ஆச்சரியங்கள் கொடுக்கும் சந்தோஷங்கள் இந்த பூமியில் வேறு எங்கே கிடைக்கும்..
8:35 AM
Post a Comment
<< Home